கோலாலம்பூர், ஜூலை 5-

அம்னோ தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ ஷாஹ்ரிர் தமக்கு எதிராகக் கொண்டு வந்த வழக்கில் நீதிபதி ரோஸ் மாவாரை அகற்ற வேண்டுமென்ற டோமி தோமஸின் மனு மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

துன் மகாதீர் இரண்டாவது முறையாக பிரதமராக இருந்த ஜூன் 2018 – பிப்ரவரி 2020 கால கட்டத்தில் ஷாஹ்ரிர், அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து 1 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோதப் பணத்தைப் பெற்றதாக சட்டத்துறைத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ டோமி தோமஸ் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அது தமக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட வழக்கு என்று கூறி ஷாஹ்ரிர், டோமி தோமஸ் மீது வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை நடத்தும் நீதிபதி குழுவில் நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் இருந்தால், தமக்கு முறையான நீதி கிடைக்காது என்று டோமி தோமஸ் முறையிட்டார்.

இதனையடுத்து, அந்த நீதிபதியை அந்த வழக்கை நடத்துவதிலிருந்து அகற்றப்படுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

-பொன் முனியாண்டி