கோலாலம்பூர், ஜூலை 6-
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நாடு முழுமையிலும் மேற்கொள்ளப்பட்ட 6,913 சோதனை நடவடிக்கைகளில் சட்டவிரோத முறையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 26,320 அந்நியர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவு தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
அவர்களை உணவகங்கள், தொழிற்சாலைகள், மளிகைக் கடைகள் போன்ற இடங்களில் வேலைக்கு அமர்த்தியிருந்த 1,005 முதலாளிகளும் கைது செய்யப்பட்டதாக ஸக்காரியா குறிப்பிட்டார்.
மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் பயண ஆவணங்களின்றி அந்த அந்நியர்கள் வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி