Homeஅரசியல்பதவி விலகுவீர்! அன்வாருக்கு எதிராக 300 பேர் அமைதிப் பேரணி 

பதவி விலகுவீர்! அன்வாருக்கு எதிராக 300 பேர் அமைதிப் பேரணி 

ஷா ஆலம், ஜூலை 6-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இன்று காலையில் ஷா ஆலம், செக்‌ஷன் 9, கார் நிறுத்துமிடத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.

தற்போதைய விலைவாசி உயர்வு, விற்பனை மற்றும் சேவை வரியை விரிவாக்கி பொதுமக்களுக்குக் கடும் சிரமத்தை ஏற்படுத்தியதை எதிர்த்து, அந்த ஆர்ப்பாட்டத்தைத் தாங்கள் நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பேரணியில் கலந்து கொண்டோர் ‘அன்வார் பதவி விலக வேண்டும்’ , ‘மக்கள் கடும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்’, ‘மக்களின் மீது கடுமையான சுமை’ போன்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

இந்தப் பேரணியில் பெஜுவாங் தகவல் பிரிவைச் சேர்ந்த ரபிக் ரஷிட் அலி, பாஸ் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் ஹனிஃப் ஜமாலுடின், சிலாங்கூர் பாஸ் தலைவர் சுக்ரி ஒமார், கிளந்தான் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் கமால் முகமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more