பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10-
அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உட்பட அதில் பயணம் செய்த ஐவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
அந்த ஏஎஸ் 355என் ரக ஹெலிகாப்டர் ஜொகூர், கெலாங் பாத்தா, சுங்கை பூலாய் அருகே விபத்துக்குள்ளானதாக மலேசிய வான் போக்குவரத்து அமலாக்க பிரிவு (சிஏஏஎம்) கூறியது.
அந்த ஹெலிகாப்டர் இன்று காலை மணி 9.51க்கு தஞ்சோங் குப்பாங் போலீஸ் நிலையத்தில் இருந்து 4 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
விபத்தில் சிக்கிய அந்த ஐவரும் கடற்படை போலீசாரால் காப்பாற்றப்பட்டு ஜொகூரில் உள்ள மலேசிய கடற்படை அமலாக்க நிறுவன (ஏபிஎம்எம் )படகு துறைக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காகப் பின்னர் ஜொகூர், சுல்தான் ஹமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று சிஏஏஎம் அறிக்கை ஒன்றின் வழி விவரித்தது


