Homeஅரசியல்சாத்தே அரசியலை' நிறுத்துவீர்! அம்னோ உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்  

சாத்தே அரசியலை’ நிறுத்துவீர்! அம்னோ உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்  

கோலாலம்பூர், ஜூலை 21-

அம்னோவின் நிலையை ஆட்டம் காண வைக்கும் சாத்தே அரசியலை கட்சியின் எல்லா மட்டத்திலான உறுப்பினர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அதன் தலைமைச் செயலாளர் டாக்டர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி அறிவுறுத்தியுள்ளார்.

கட்சிக்குள்ளே பதவிப் போட்டி, போட்டா போட்டி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுதல், பிரச்சினைகளை வளர்த்தல், கீழறுப்பு போன்ற நடவடிக்கைகள் அடுத்த பொதுத்தேர்தலில் அம்னோவின் வெற்றியை வெகுவாகப் பாதிக்கும் என்றும் அஷ்ராப் வாஜ்டி எச்சரித்தார்.

புக்கிட் கந்தாங் அம்னோ தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்சி உறுப்பினர்கள் அம்னோவின் முக்கிய கொள்கைகளான சமயம், இனம் மற்றும் நாட்டைக் காக்கும் கொள்கைகளை நினைவில் நிறுத்தி செயலாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more