Homeகுற்றவியல்ஜோ லோ இருக்குமிடம்: அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை! 

ஜோ லோ இருக்குமிடம்: அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை! 

புத்ரா ஜெயா, ஜூலை 21-

1எம்டிபியின் பெரும் தொகையைக் கொள்ளையடித்து பல ஆண்டு காலமாகத் தலைமறைவாக இருந்து வரும் பினாங்கு தொழிலதிபர் ஜோ லோ தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஜோ லோவின் விவகாரத்தைக் கையாண்டு வரும் உள்துறை அமைச்சுக்கு அது சம்பந்தமான விவரம் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1எம்டிபியின் 1,900 கோடி வெள்ளி பணத்தைக் களவாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜோ லோ தற்போது சீனா, ஷாங்காயில் அரசின் வெளிநாட்டு மூலதன விவகாரங்களுக்கு ஆலோசகராக இருப்பதோடு அந்நகரின் கிரீன் ஹில் பகுதியில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகப் பத்திரிகை புலனாய்வில் ஈடுபட்டுள்ள இரு வெளிநாட்டு செய்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலானது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more