புத்ரா ஜெயா, ஜூலை 21-
நாட்டின் ஐந்து வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் தூய்மைக் கேடு அதிகரித்து வருவதாகச் சுற்றுச்சூழல் இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று மதியம் 3 மணியளவில் புத்ரா ஜெயாவின் காற்றின் தூய்மைக் கேட்டின் குறியீடு 139 ஆகவும் சிலாங்கூரில் உள்ள பந்திங், ஜோஹான் செத்தியாவில் 154ஆகவும் நீலாயில் 162 ஆகவும் அலோர் காஜாவில் 110ஆகவும் குறியீடு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளில் காட்டை அழித்து தீயை மூட்டும் சம்பவங்களினால் எல்லை தாண்டி வரும் புகைமூட்டமே காற்றின் தூய்மைக் கேட்டிற்குக் காரணமாக உள்ளதாக சுற்றுச்சூழல் இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ வான் அப்துல் லத்திப் குறிப்பிட்டுள்ளார்.
புகை மூட்டம் கடுமையானால் அதன் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சம்பந்தப்பட்ட இலாகாக்கள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி


