Homeஅரசியல்பிரதமருக்கு எதிரான கருத்து:  9 பிகேஆர் எம்பிக்கள் இடைநீக்கமா?

பிரதமருக்கு எதிரான கருத்து:  9 பிகேஆர் எம்பிக்கள் இடைநீக்கமா?

கோலாலம்பூர், ஜூலை 21-

நீதிபதிகள் நியமனம் மற்றும் அந்த நியமனங்களில் அரசியல் தலையீடு போன்ற பிரச்சினைகளை ஆராய அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டுமென்று ரபிஸி ரம்லி தலைமையிலான 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டுமென்ற அறைகூவல் கட்சியினரால் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கட்சியின் நற்பெயரை நிலைநாட்டும் வகையில் செயல்பட்டிருக்கும் தம்மைச் சேர்த்து 9 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தால், மடானி அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் பிகேஆரின் நிலை ஆட்டம் காணும்.

அம்னோ, ஜசெக மற்றும் ஜிபிஎஸ் போன்ற கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து, வெறும் 22 உறுப்பினர்களை மட்டுமே பிகேஆர் கொண்டிருக்கும் ஆபத்தான நிலை ஏற்படலாம் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மக்களிடையே கட்சியின் நற்பெயரை நிலைநிறுத்த கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கட்சியையும் பிரதமரையும் கண்டித்து, வெறுப்பை விதைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஜொகூர் எம்பி ஹசான் அப்துல் கரிம் மீது எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது, 9 எம்பிக்களின் மீது மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது கட்சியின் பாரபட்சமான செயல்பாடு என்றும் கட்சிக்கு அது அவப்பெயரைக் கொண்டுவரும் என்றும் ரபிஸி ரம்லி எச்சரித்தார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more