Homeசமூகம்பிரதமரின் நற்செய்தி :நாளை அல்லது புதன்கிழமை அறிவிக்கப்படும்! 

பிரதமரின் நற்செய்தி :நாளை அல்லது புதன்கிழமை அறிவிக்கப்படும்! 

புத்ரா ஜெயா, ஜூலை 21-

நாட்டு மக்களுக்கான நற்செய்தி நாளை அல்லது புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம் என்றார்  பிரதமர் .

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தமக்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

“மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற  எத்தகைய மாற்றங்கள் செய்ய வேண்டும், என்னென்ன அறிவிப்புகள் அவசியம் என்பதில் மிக கவனமுடன் செயலாற்ற வேண்டும்.

” இன்னும் ஓரிரு நாள்களில் தேவையான அறிவிப்பை நான் வெளியிடுவேன்”.

அது கூடுதல் உதவித் திட்டமாக இருக்கக்கூடும். ஆனால் அதைச் சரியாக மேற்கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என்று  இன்று நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் பிரதமர் விவரித்தார் .

spot_img

latest articles

explore more