Homeசமூகம்ஜொகூர், மூவார், ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளியின் 115-ஆம் ஆண்டு நிறைவு விழா பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது!

ஜொகூர், மூவார், ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளியின் 115-ஆம் ஆண்டு நிறைவு விழா பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது!

மூவார், ஜூலை 21–

ஜொகூர், மூவாரிலுள்ள தேசிய வகை ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளியின் 115-ஆம் ஆண்டு நிறைவு விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் தேதி, சனிக்கிழமை, மாலை 5:30 மணிக்கு, மாபெரும் விருந்தோம்பலுடன் அவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை வாரிய உறுப்பினர்கள், இந்திய சமூக சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் முதலானோர் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமென, விழாவின் ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் நுழைவுச்சீட்டுகளை (Ticket) முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு நபருக்கான நுழைவுச்சீட்டு கட்டணமாக 100 ரிங்கிட்டும் ஒரு மேசை அதாவது 8 நுழைவுச் சீட்டுகளுக்கான கட்டணமாக 800 ரிங்கிட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விலிருந்து பெறப்படும் நிதி, ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கும் மாணவர் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.

பள்ளியின் நீண்டகால பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டும் இந்த விழாவில், அனைவரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பள்ளி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

மேல்விவரங்களுக்கு கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்புக்கொள்ளலாம்.

ஆசிரியை கவிதா – 0176871680 பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆனந்த் குமார் – 0192121657

தேசிய வகை ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளியின் பழமைத் தோற்றம் குறித்த புகைப்படங்கள்.

spot_img

latest articles

explore more