சென்னை, ஆக.2-
நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவால் தனது 71-ஆவது வயதில் காலமானார்.
புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1984-ஆம் ஆண்டு வெளியான‘நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமனார் மதன் பாப்.
மதன் பாப் தன்னுடைய தனித்துவமான சிரிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் . அவரது குணச்சித்திர நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக அவரது கள்ளம் கபடமில்லா சிரிப்புக்கு தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு.
இந்நிலையில் அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

