கோலாலம்பூர், ஆக. 2-
அண்மையில் நடைபெற்ற அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணியானது மக்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதால் அது எதையும் சாதிக்கவில்லை என்று பெர்சேவின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார்.
அந்தப் பேரணி எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதால் தன்னைப் போல பலரும் அதில் கலந்து கொள்வதிலிருந்து விலகி இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பேரணியில் கலந்து கொண்டோர் அரசியல்வாதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகவும் இருந்த வேளையில், அது பொதுமக்களின் எந்தவொரு நன்மையைக் கருதியும் நடத்தப்படவில்லை என்றும் அவர் சாடினார்.
-பொன் முனியாண்டி


