கோலாலம்பூர், ஆக.6-

பெட்ரோலுக்கான அரசின் உதவித் தொகையை நாட்டிலுள்ள அந்நிய நாட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் வலியுறுத்தியுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது நிந்தனைக் குற்றச்சாட்டு என பிகேஆரின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசான் கரிம் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டு சட்ட நடவடிக்கையில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்தாலும் அதனை வன்மையாக மறுத்து முஹிடின் யாசின் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளதோடு அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

முஹிடின் மீதான குற்றச்சாட்டை அன்வார் நிரூபிக்க வேண்டுமென்றும், அன்வாரின் கூற்று உண்மை இல்லையென்றால் அவர் அவசியம் முஹிடின் யாசினிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் கரிம் ஹசானை மேற்கோள் காட்டி மலேசியா கினி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

-பொன் முனியாண்டி