கோலாலம்பூர், ஆக. 7-
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டில் சிலம்பம் இன அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ மறுத்துள்ளார்.
போட்டியை ஏற்று நடத்தும் சிலாங்கூர் மாநிலத்திற்கு, சுக்மாவில் முக்கிய விளையாட்டுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை என்றும் ஹன்னா வலியுறுத்தினார்.
அதுமட்டுமல்லாமல், சுக்மா விளையாட்டு போட்டியை ஏற்று நடத்தும் ஒவ்வொரு மாநிலமும் தாங்கள் முதன்மையாக கருதப்படும் விளையாட்டுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முழு அதிகாரம் இருப்பதாக ஹன்னா குறிப்பிட்டார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டில் சிலம்பம் மட்டுமல்லாமல் இன்னும் சில விளையாட்டுகளும் நீக்கப்பட்டதற்கு ஹன்னா கவலை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை இன அடிப்படையில் கருத வேண்டாம் எனப பொது மக்களுக்கு ஹன்னா வலியுறுத்தினார்.
-அஸ்வினி செந்தாமரை

