Homeசமூகம்எஸ்பிஎம்:சிறப்பு தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பு!

எஸ்பிஎம்:சிறப்பு தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பு!

கோலாலம்பூர் ஆக 17-

மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் தலைநகர், கம்போங் அத்தாப்பில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற விழாவில் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. .

சிறப்பு பிரமுகர்களாக அரபுலக தொழிலதிபரும் அமீரக அழகன் குளம் முஸ்லிம் ஜமாத் தலைவருமான அல் அமின் மற்றும் குவாலிடாஸ் குழுமத்தின் ஸ்தாபகர் டத்தோ டாக்டர்  நூருல் அமின் ஆகியோர்   கலந்து சிறப்பித்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் அமைப்பு சிறப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பல வகைகளில் உதவி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடமும் எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் தர மடிக்கணினிகளை அன்பளிப்பு செய்துள்ளது.

இந்த அமைப்பு வசதி குறைந்த மக்களுக்கு நோன்பு பெருநாள் காலத்திலும்   உதவிகளை வழங்கி வருகின்றது.

மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் மூலமாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டுவோம் என்றார் ஜாகிர் உசேன்.

 

spot_img

latest articles

explore more