கோலாலம்பூர், ஜூலை 19-

பிஸ்தாரி ஜெயா மற்றும் ஈஜோக் வட்டாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் சில குடும்பங்களை ஜீவா தன்னிடம் பட்டியலிட்டு காட்டி இவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யமுடியுமா என கேட்டபோது, இப்படிப்பட்ட சில குறிப்பிட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான அடுத்த மாதம் கோலசிலாங்கூர் பட்டணத்தில் ‘நான் வாழ வைப்பேன் என்ற மாபெரும் கலைநிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வரும் தொகையினை மிகவும் சிரமப்படும் இந்த குடும்பங்களுக்கு வழங்கலாம் என ஆலோசனை கூறியதாகவும் டத்தோ மலர்விழி குணசீலன் கூறினார்.

மேலும் இதை மலேசிய மக்கள் சேவை மையமும் கோலசிலாங்கூர் தொகுதி காங்கிரசும் பிஸ்தாரி ஜெயா, ஈஜோக் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் அரசு சார்பற்ற இயக்கங்கள், ஆலயங்கள் மற்றும் இதர தரப்பினரின் ஒட்டுமொத்த ஆதரவில் இந்தக் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் டத்தோ மலர்விழி குணசீலன் கூறினார். தான் புக்கிட் ரோத்தான் வட்டாரத்திலுள்ள தோட்டப்புறத்தில் வளர்ந்து தோட்டப்புற மக்கள் மற்றும் வாழ்க்கையின் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டிருக்கும் காரணத்தால் ஜீவாவுடன் இணைந்து தாம் இந்த மாபெரும் நிகழ்ச்சியை படைப்பதாகவும் டத்தோ மலர்விழிகுணசீலன் கூறினார்.

குமரசாமி ஜீவா

மலேசிய மக்கள் சேவை மையத்தின் தேசியத் தலைவர் டத்தோ மலர்விழி குணசீலன் மனித நேயம் மற்றும் மனிதாபிமானமிக்க ஒரு தலைவர் என கோலசிலாங்கூர் தொகுதி காங்கிரஸ் தலைவர் திரு.ஜீவா கூறினார். கடந்த சனிக்கிழமை விடுமுறை நாளில் அவருக்கு போன் செய்து பிஸ்தாரி ஜெயாவில் திரு.பிலிப்ஸ் மைக்கலின் குடும்பம் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் டி.என்.பி. மின்சாரத்தைத் துண்டித்து விட்டதாகவும் ரிங்கிட் 700 கட்டினால்தான் ஒரு வாரமாக இருளில் இருக்கும் இந்தக் குடும்பம் வெளிச்சத்தைப் பார்க்க முடியும் என்றும் கூறினேன்.

மேலும் மார்பக புற்றுநோயால் அவதியுறும் மனைவி பாத்திமா மற்றும் 5 பிள்ளைகளுடன் சாப்பாட்டிற்குக்கூட சிரமப்படுகிறார்கள். இவர்களுக்கு டி.என்.பி. கட்டணம் ரிங்கிட் 700யையும் செலவு சாமான்களையும் வாங்கித்தர முடியுமா எனக் கேட்டேன். மறு விநாடியே எதைப்பற்றியும் சிந்திக்காமல் தொலைபேசியை கீழே வையுங்கள், உடனே வந்து உதவி செய்கிறேன் எனக் கூறி நான் கேட்ட அனைத்தையும் செய்துகொடுத்ததோடு மேற்கொண்டு அந்த குடும்பத்திற்கு ரொக்கத்தையும் கொடுத்து சென்றார்.