கிள்ளான்:
சிலாங்கூர், கிள்ளானில், மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் இளைஞர் செலுத்திய வாகனம் மோதி உயிரிழந்த மோட்டார்சைக்கிளோட்டி அமிருல் ஹபீஸின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ் ஆறுதல் கூறினார்.
மது மற்றும் போதைப்பொருள் ஓட்டுநர்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கடுமையான சட்ட அமலாக்கமும் பாரபட்சமற்ற நீதியும் அவசியம்.
இத்தகைய சாலை விபத்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தப்படுவதால், இது குறித்த மக்களின் கவலைகளை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி உரியத் தீர்வு காணப் போவதாக அவர் உறுதியளித்தார்.
மேலும், சமூகத்தின் கூட்டு விழிப்புணர்வு மற்றும் முறையான சட்ட நடவடிக்கைகள் மூலமே பாதுகாப்பான மலேசியாவை உருவாக்க முடியும் என்றார் அவர்.
இன்றைய சந்திப்பில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு உடனிருந்தார்.

