ஷா அலாம்:
ஷா ஆலாம் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில், மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை இலக்காகக் கொண்ட ‘கல்வி யுத்தம் 2026’ (Kalvi Yuttham 2026) திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா, ஷா ஆலாம், சுங்கை ரெங்கம் மண்டபத்தில் (Dewan Konvensyen SJK T Sg. Renggam) இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நிகழ்வு, கல்வியில் சிறந்த விளங்கிய UP 1 High Achievers மாணவர்களைக் கௌரவிப்பதோடு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, உத்திகள் நிறைந்த Chakar Vyuha போட்டியில் சிறந்த 10 இடங்களை பிடித்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
நவீன கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மின்னணு சாதனங்களுக்கு அடிமையாதல் (Gadget addiction) குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது; இதில் டிஜிட்டல் சமநிலையைப் பேணுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இறுதியாக நடைபெற்ற AI (செயற்கை நுண்ணறிவு) பயிலரங்கம், வருங்காலத் தொழில்நுட்பங்களை மாணவர்கள் நேரடியாகக் கையாண்டு பழக ஒரு வாய்ப்பாக அமைந்தது. இவ்வாறாக, இன்றைய நாள் பாரம்பரியச் சிறப்பையும் டிஜிட்டல் யுகத்திற்குத் தேவையான திறன்களையும் ஒருசேர வழங்கியது.

