காஜாங்:
கடந்த வாரம் இறுதியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற சுங்கை ரிஞ்சிங் கெசுமா லேக்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ஆண்டு கூட்டம் தேர்தலில் புதியத் தலைவராக கே.முத்துராவ் வெற்றி பெற்று தேர்வானார்.

சிறந்த சமூக சேவையாளராக வலம் வரும் இவரின் வெற்றிக்கு செமினி வட்டார இந்து சங்க பேரவைத் தலைவர் முத்து கிருஷ்ணன் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
கெசுமா லேக்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வளர்ச்சிக்கும் சமய மேம்பாட்டிற்கும் பாடுபடுவேன் என்று முத்துராவ் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் துணை தலைவராக சரவணன், செயலாளராக வச்ச விக்னேஸ்வரன், துணை செயலாளராக மகேந்திரன், பொருளாளராக தனசிங்கம், துணை பொருளாளராக சிவராஜ், இளைஞர் அணி தலைவராக நாகப்பன், மகளிர் அணி தலைவியாக மேகலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


