வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பெட்ரோல் விலை 7 காசு உயர்கிறது!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பெட்ரோல் விலை 7 காசு உயர்கிறது!

கோலாலம்பூர், நவ, 8-

ரோன் 95, ரோன் 97 பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு காண்கிறது. புதன்கிழமை தொடங்கி, அடுத்த வாரம் வரை ரோன் 95 பெட்ரோல் விலை 7 காசு உயர்வு கொண்டு, 2.31 காசுக்கு விற்கப்படும். கடந்த வாரம் முழுவதும் 2.24 காசுக்கு அது விற்கப்பட்டது.

இந்நிலையில் ரோன் 97 பெட்ரோல் விலை 6 காசு உயர்வு கண்டு 2.60 காசுக்கு விற்கப்படும். இதற்கு முன்னதாக 2.54 காசுக்கு அது விற்கப்பட்டது. இதேபோல் டீசல் விலையும் 3 காசு உயர்வு கண்கிறது. அடுத்த வாரம் வரை 2.20 காசுக்கு டீசல் விற்கப்படும்.

தொடர்ந்து 3ஆவது வாரமாக பெட்ரோல் விலை உயர்வுக் கண்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்வு கண்டு வரும் நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு கண்டு வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன