லண்டன், நவ.9 –
காயம் அடைந்துள்ள டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் ஆட்டக்காரர் ஹாரி கேன், அர்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் களமிறங்குவார் என அதன் நிர்வாகி மவ்ரிசியோ பொச்சாடினோ உறுதி அளித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்டல் பேலசுக்கு எதிராக நடைபெற்ற பிரீமியர் லீக் ஆட்டத்தின்போது ஹாரி கேன் காயம் அடைந்தார். இதனால் ஜெர்மனி, பிரேசில் அணிகளுடனான நட்புமுறை ஆட்டங்களில் இருந்தும் ஹாரி கென் விலகிக் கொண்டார்.
ஆனால் நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள லண்டன் டார்பி ஆட்டத்தில் ஹாரி கேன் நிச்சயம் பங்கேற்பார் என பொச்சாடினோ கூறினார். அர்செனலின் எமிரேட்ஸ் அரங்கத்துக்கு பயணமாகும் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் முதன்மை அணியில் நிச்சயம் ஹாரி கேன் இடம்பெறுவார் என பொச்சாடினோ கூறினார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தற்போது 3 ஆவது இடத்தில் உள்ளது.


