ஆம்ஸ்டர்டாம், நவ.9 –
நெதர்லாந்து கால்பந்து அணியின் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து விலகவிருப்பதாக டிக் அட்வோகாட் அறிவித்துள்ளார். இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள இரண்டு நட்புமுறை ஆட்டங்களுக்குப் பின்னர் நெதர்லாந்து பயிற்றுனர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக டிக் அட்வோகாட் தெரிவித்தார்.
70 வயதுடைய டிக் அட்வோகாட் இந்த ஆண்டின் மத்தியில் டானி பிலின்டிடம் இருந்து பயிற்றுனர் பொறுப்பை ஏற்றார்.எனினும் 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தேர்வு பெறுவதில் நெதர்லாந்து தோல்வி கண்டதை அடுத்து அட்வோகாட் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்.
ஸ்காட்லாந்து, ருமேனியாவுடன் நட்புமுறை ஆட்டங்களில் நெதர்லாந்து விளையாடவிருக்கிறது. 2010 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட நெதர்லாந்து 2016 ஐரோப்பிய கிண்ணப் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.


