Homeசமூகம்நீயா நானா புகழ் கோபி பங்கேற்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் வெற்றித் திருநாள்

நீயா நானா புகழ் கோபி பங்கேற்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் வெற்றித் திருநாள்

ஊத்தான் மெலிந்தாங், நவ, 9-

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் வெற்றித் திருநாள் எனும் மாபெரும் விழா, ஊத்தான் மெலிந்தாங் ஷண்மார்க்க இந்திய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி கலந்து கொள்கிறார். இதில் சிறப்பு அம்சமாக விஜய் தொலைக்காட்சி புகழ் கோபிநாத் எல்லா குழந்தைகளும் மேதைகளே : பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பில் 1 மணி நேரம் தன்புனைப்பு உரையாற்றுகிறார்.

அதோடு இந்திய மக்களுக்கான அரசாங்கத் திட்டங்களின் கண்காட்சியும் இடம்பெறுகின்றது. இதில் மலேசிய இந்திய வியூகப் பெருந்திட்டம், நிதி நிர்வாகம் மற்றும் ஆலோசனை கழகம் இடம்பெறும். இத்துடன் துணைப் பிரதமரின் பாகான் டத்தோ மக்களுக்கான சிறப்பு கண்காட்சியும் இந்த விழாவில் இடம்பெறுகின்றது.

அத்துடன் கண் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, இரத்தம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம், தேங்காய் மட்டை உறிக்கும் போட்டி, குடம் அலங்கரிக்கும் போட்டி ஆகியவையும் இடம்பெறுகின்றன. சிறுவர்களுக்காக கேளிக்கை நிகழ்ச்சிகளும் சதுரங்க போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். தீபாவளி மதிய விருந்தும் இந்நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் தொடங்கி இரவு 7 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். மேல் விவரங்களுக்கு 010 என்ற எண்களில் தொடபு கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more