Homeமலேசியாஇந்திய இளைஞர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!

இந்திய இளைஞர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!

ஈப்போ, நவ. 9-
15 வயதுடைய பெண்ணை கற்பழித்ததாக தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இந்திய இளைஞர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. ஆயினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார்.

பி. கருணாகரன் (வயது 20) எனும் இளைஞரே குற்றம் சாட்டப்பட்டவராவார். அவர் கடந்த அக்டோபர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாமான் பத்துகாஜா பெர்டானா, பத்து காஜாவிலுள்ள எனும் இடத்தில் 15 வயதுடைய அந்த பெண்ணை கற்பழித்ததாக நீதிமன்றத்தில் குற்றவியல் பிரிவு 376இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

அவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தால் நீதிபதி சூல்கர்ணைன் அவரை 12 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிப்பதற்கு அனுமதி வழங்கியதுடன் இவ்வழக்கை டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கில் கருணாகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜசேகரன் ஆஜரான வேளையில் அரசு தரப்பில் நைடத்துல் அதிரா அஸ்மான் ஆஜரானார்.

spot_img

latest articles

explore more