Homeமலேசியாசிறந்த நூல் நிலையம் கொண்ட பள்ளியாக தெமர்லோ தமிழ்ப்பள்ளி தேர்வு!

சிறந்த நூல் நிலையம் கொண்ட பள்ளியாக தெமர்லோ தமிழ்ப்பள்ளி தேர்வு!

கோலாலம்பூர், நவ. 9-
2017ஆம் ஆண்டின் பேராக் மாநிலத்திl சிறந்த நூல் நிலையம் கொண்ட பள்ளியாக தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாநில கல்வி மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறந்த நூல் நிலையம் கொண்ட பள்ளியாக தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில், வட்டார ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலிடத்தை வென்றோம். அதே போன்று, மாநில ரீதியிலும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் மா.ராதை தெரிவித்தார்.

பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும்தான் எங்கள் பள்ளி நூலகம் சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்டதற்கு முதன்மை காரணம் என அவர் சொன்னார். சுமார் 6 ஆண்டு காலம் இந்த நூலகத்தை உருவாக்குவதற்கு நாங்கள் பாடுபட்டுள்ளோம். பள்ளி மாணவர்களும் தங்களது ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

இதனிடையே, அடுத்தாண்டு தேசிய ரீதியில் நடைபெறும் போட்டிக்கும் நாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அந்தப் போட்டியிலும் சிறந்த நூல் நிலையம் கொண்ட பள்ளியாக எங்களது பள்ளி தேர்வு செய்யப்படும் என மா.ராதை நம்பிக்கை தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more