Homeவிளையாட்டு2018 உலகக் கிண்ண பிலே ஆப் சுற்று : கிரேக்கத்தை பந்தாடியது குரோஷியா!

2018 உலகக் கிண்ண பிலே ஆப் சுற்று : கிரேக்கத்தை பந்தாடியது குரோஷியா!

சக்ரிப், நவ.10 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதிப் பெறும் தனது வாய்ப்பை குரோஷியா பிரகாசப்படுத்தி கொண்டுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற பிலே ஆப் ஆட்டத்தில் குரோஷியா 4 – 1 என்ற கோல்களில் கிரேக்கத்தை தோற்கடித்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை ஏதேன்சில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் கிரேக்கம் கடும் சவாலை சந்திக்கவுள்ளது.

மாரியோ மன்சூக்கிச் காயம் அடைந்ததை அடுத்து நிக்கோலா கலினிச், குரோஷியாவின் தாக்குதல் பகுதியில் களமிறங்கினார். 13 ஆவது நிமிடத்தில் நிக்கோலா கலினிச் பெற்று தந்த பினால்டியை குரோஷியாவின் கேப்டன் லுக்கா மோட்ரிச் கோலாக்கினார். 6 நிமிடங்களுக்குப் பின்னர் குரோஷியாவின் இரண்டாவது கோலை கலினிச் போட்டார்.

கிரேக்க அணி ஒரு கோலைப் போட்டிருந்தாலும் 33 ஆவது நிமிடத்தில் ஈவான் பெரிசிச் போட்ட கோல் மீண்டும் குரோஷியாவை வசதியான நிலையில் வைத்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிமிடங்களில் ஆன்ட்ரஸ் கிராமாரிச் போட்ட கோல் குரோஷியாவின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது.

spot_img

latest articles

explore more