பாரிஸ், நவ.11 –

நெய்மர் தலைமையிலான பிரேசில் அணி ஜப்பானை நட்பு ரீதியிலான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பிரேசில் – ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டம் பிரான்சில் நடைபெற்றது.

பலம் வாய்ந்த பிரேசில் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி நெய்மர் கோல் அடித்தார்.

17 ஆவது நிமிடத்தில் மார்சிலோ ஒரு கோலும், கேப்ரியல் ஜீசஸ் 36 ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடிக்க முதல் பாதி நேரத்தில் 3-0 என பிரேசில் முன்னிலைப் பெற்றது

2 ஆவது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் ஜப்பானின் டொமோயாகி மகினோ ஒரு கோல் அடிக்க பிரேசில் 3-1 என வெற்றி பெற்றது.