ஸ்டோக்ஹோல்ம், நவ.11-
2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதிப் பெறுவதில் இத்தாலி கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிலே ஆப் ஆட்டத்தில் இத்தாலி 0 – 1 என்ற கோலில் சுவீடனிடம் தோல்வி கண்டது. இந்த தோல்வியால் அடுத்த ஆண்டில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு இத்தாலி தேர்வுப் பெறுவது கேள்வி குறியாகியுள்ளது.

61 ஆவது நிமிடத்தில் சுவீடனின் வெற்றி கோலை ஜாக்கோப் ஜோஹன்சன் போட்டார். இந்த ஆட்டத்தில் சுவீடன் மேற்கொண்ட பல தாக்குதல்களை கோல் காவலர் கியான்லுயூகி புஃபோன் தடுத்து நிறுத்தினார். இந்நிலையில் திங்கட்கிழமை சன் சீரோ அரங்கில் நடைபெறவுள்ள இரண்டாவது பிலே ஆப் ஆட்டத்தில் இத்தாலி 2 கோல்கள் வித்தியாசத்தில் சுவீடனை வீழ்த்தினால் மட்டுமே உலகக் கிண்ணப் போட்டியில் கால் பதிக்க முடியும்.

ஆக கடைசியாக 1958 ஆம் ஆண்டில் இத்தாலி உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தேர்வு பெறுவதில் தோல்வி கண்டது. இம்முறை நடைபெற்ற தகுதிச் சுற்றில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இத்தாலி ஸ்பெயினிடம் 0 – 3 என்ற கோல்களில் தோல்வி கண்டதை அடுத்து இரண்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. தற்போது பிலே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டிருப்பதால் இத்தாலியின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.


