Homeமலேசியாபினாங்கில் துயர்துடைப்பு மையங்களில் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது!

பினாங்கில் துயர்துடைப்பு மையங்களில் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது!

ஜோர்ஜ்டவுன், நவ.11-
பினாங்கு மாநிலத்தில் வெள்ள நிலைமை தற்போது சீரடைந்து வருவதோடு அங்குள்ள 6 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இதற்கு முன் 304 குடும்பங்களைச் சேர்ந்த 1,313 பேர் அங்கு தங்கியிருந்ததைக் காட்டிலும் இன்று காலை 8.00 மணி வரை 243 குடும்பங்களைச் சேர்ந்த 1,040 பேர் அங்கு தங்கியிருக்கின்றனர் என்று வெள்ள நடவடிக்கை குழுவின் பேச்சாளர் கூறினார்.

செபெராங் பிராய் உத்தாரா மாவட்டத்தில் 5 துயர் துடைப்பு மையங்களும் செபெராங் பிராய் தெங்காவில் ஒரு மையமும் திறக்கப்பட்டுள்ளன. இதில் செபெராங் பிராய் உத்தாராவில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 820 பேர் மற்றும் குவான் ஜெரிங் (செபெராங் பிராய் தெங்கா) மண்டபத்தில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். பினாங்கு வெள்ளத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more