Homeமலேசியாமலேசியாவை வீழ்த்தியது வடகொரியா!

மலேசியாவை வீழ்த்தியது வடகொரியா!

புரிராம், நவ.11-
மலேசியர்கள் மட்டுமின்றி ஆசிய மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த மலேசியா இடையிலான 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தகுதி ஆட்டத்தில் வடகொரியா 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. பி பிரிவில் மலேசியா இடையிலான இந்த ஆட்டம் நேற்று தாய்லாந்து, புரிராமிலுள்ள ஐ அரங்கில் நடைபெற்றது.

தேசிய பயிற்றுநர் நேலோ விங்காடாவின் கீழ் விளையாடிவரும் மலேசிய அணி நீண்ட காலமாக வெற்றியை பதிவு செய்வதற்கு போராடி வருகின்றது. இந்த ஆட்டத்தில் வடகொரியாவிற்கு எதிராக பலம் வாய்ந்த தற்காப்பு ஆட்டத்தை வழங்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் மலேசிய அணியின் கேப்டன் முஹம்மட் பாட்லியின் கையில் பந்து பட்டதை தொடர்ந்து வடகொரிய அணிக்கு பெனால்டிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை அவ்வணியின் பாக் க்வாங் ரியோங் கோலாக்கினார். அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் வடகொரியாவின் இரண்டாவது கோலை கிம் யு சோங் புகுத்தினார். முதல் பகுதி ஆட்டம் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வடகொரியாவிற்கு சாதகமாக முடிந்த நிலையில் பிற்பகுதி ஆட்டத்திலும் அவ்வணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் கிம் யோங் II மற்றும் 58ஆவது நிமிடத்தில் ஜோங் II க்வான் ஆகியோர் கோல்களை புகுத்தினர்.

மலேசியாவிற்கான ஒரே ஒரு ஆறுதல் கோலை ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் மலேசிய அணியின் இளம் தாக்குதல் ஆட்டக்காரரான சவாவி ரசிட் புகுத்தினார். இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ள நிலையில் 2019ஆம் ஆண்டு ஆசிய கிண்ண போட்டிக்கு தகுதி பெறும் மலேசியாவின் வாய்ப்பு குறைந்துள்ளது. வருகின்ற 13ஆம் தேதி அதே அரங்கில் மலேசிய அணி வடகொரியாவை மீண்டும் சந்திக்கவுள்ளது. அதன் பின்னர் பெய்ரூட்டில் லெபானான் அணியை மலேசிய அணி சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more