அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தேசிய முன்னணிக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் சம அளவில் ஆதரவு
முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணிக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் சம அளவில் ஆதரவு

கோலாலம்பூர், ஜூலை.20 –

மலாய்க்காரர்கள் மத்தியில் தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் சம அளவில் ஆதரவு பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. இன்வோக்  ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.  இந்த ஆய்வுத் தொடர்பில் கருத்துரைத்த பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி  , தேசிய முன்னணிக்கு மலாய்க்காரர்கள் மத்தியில் 35 விழுக்காடு ஆதரவும், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஒரு விழுக்காடு கூடுதலாக 36 விழுக்காடு ஆதரவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் பாஸ் கட்சிக்கு 14 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ள வேளையில் எஞ்சிய 15 விழுக்காட்டினர் தங்களின் முடிவை தெரிவிக்கவில்லை. 160,  761  பேரிடம் , கைத்தொலைப்பேசியின் மூலம்  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 17, 107 பேர் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். ஜூன் 5 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதனிடையே சீனர்கள் மத்தியில் 53 விழுக்காட்டினர் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேசிய முன்னணிக்கு 22 விழுக்காடு மட்டுமே ஆதரவு கிடைத்துள்ள வேளையில் பாஸ் கட்சிக்கு ஒரு விழுக்காடு மட்டுமே ஆதரவு கிடைத்திருப்பதாக இன்வோக் ஆய்வு கூறுகிறது.

இந்தியர்கள் மத்தியில் தேசிய முன்னணிக்கு 44 விழுக்காடு ஆதரவு கிடைத்திருக்கும் வேளையில் நம்பிக்கைக் கூட்டணிக்கு 42 விழுக்காடு ஆதரவு கிடைத்துள்ளது. பாஸ் கட்சிக்கு 3 விழுக்காட்டினர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இந்த ஆய்வு தொடர்பில் முழு விவரங்களையும் எதிர்கட்சி மட்டுமே வெளியிட்டிருப்பதால் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன