பினாங்கு வெள்ளத்திற்கு உதவிய தே.மு. தலைவர்களுக்கு நன்றி! லிம் குவான் எங்

0
5

ஷா ஆலம், நவ. 13-
பினாங்கில் திடிரென ஏற்பட்ட வெள்ளத்தில் வெள்ள நிலைமையை பார்வையிடுவதற்காக நேரிடியாக களமிறங்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு தாம் நன்றியை தெரிவித்து கொள்வதாக அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
ஆளும் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே எதிரெதிரே பார்த்துக் கொள்ள வெட்கப்படும் இந்நேரத்தில் பினாங்கில் வெள்ள நிலைமையைக் காண நேரடியாக வந்த அவர்களை பாராட்டுகிறேன்.

என்னுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து கடந்த 5ஆம் தேதி அதிகாலையிலேயே வந்து விட்ட மத்திய அரசுத் தலைவர்களை நான் பாராட்டுகிறேன் என ஜசெகவின் மத்திய செயற்குழு தேர்தலுக்கான சிறப்பு விருந்துபசரிப்பில் உரையாற்றிய போது லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வெள்ளத்திற்கு உதவிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹாமிடி உள்பட அனைத்து தேசிய முன்னணி தலைவர்களுக்கும் லிம் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், வெள்ளம் ஏற்பட்ட போது உதவிக்கரம் நீட்டிய அரசு நிறுவனங்களுக்கும் லிம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த வெள்ள சம்பவம் மலேசியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்துள்ளது. இதில் பல்லின, சமய மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு இருக்கின்றனர் என ஜ.செ.க.வின் தலைமைச் செயலாளருமான லிம் சொன்னார்.