2 மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாயாருக்கு 150 ஆண்டு சிறை!

0
10

பெட்டாலிங் ஜெயா, நவ. 13-
தன்னுடைய இரண்டு மகள்களை வங்காளதேசிகளிடம் விபச்சாரத்திற்கு அனுப்பிய குற்றச்சாட்டை எதிர்நோக்கிய 39 வயதான தாயார் ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் மொத்தம் 150 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்தது.

வங்காளதேசிகள் இருவரிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ள தனித்த வாழும் தாயாரான அந்த மாது தமது 10 மற்றும் 13 வயது மகள்களை வற்புறுத்தியதாகவும் அந்தச் செயல்களை ஜோகூர், லார்கின் பெர்டானாவில் உள்ள மலிவு விலை ஹோட்டல் அறையில் அக்டோபர் 1,4,5,6 மற்றும் 7ஆம் தேதியில் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாக அவரின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அக்டோபர் 25ஆம் தேதி தாமான் பிந்தாங் செனாய் எனும் வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

விபச்சாரம் செய்வதற்கு ஒரு முறைக்கு 50 வெள்ளியும் ஆகக்குறைவாக 1 வெள்ளியையும் அவர் வசூலித்துள்ளார். தமது மகள்கள் விபச்சாரம் செய்யும்போது, அவர் அதனைத் கவனித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. குற்றம் ஒன்றுக்கு தலா 15 ஆண்டு சிறை என்ற கணக்கில் 10 குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 150 ஆண்டு சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

தனக்கு 4 மற்றும் 5 வயதில் மேலும் இரு பிள்ளைகள் இருப்பதாகவும் அபராதத்தை மட்டும் விதிக்க வேண்டுமென அவர் கோரினாலும், குற்றத்தின் கடுமைத் தன்மையைக் கருத்தில் கொண்டு அவருக்கு அச்சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி கமாருடின் கம்சுன் தெரிவித்தார்.

மேற்கண்ட 10 குற்றச்சாட்டுகளுக்கான சிறைத்தண்டனைகள் அனைத்தையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்ற உத்தரவிற்கிணங்க அந்த மாது 75 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.ங்க அந்த மாது 75 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.