சென்னை, ஜூலை.20 –
நடிகர் தனுஷ் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா இயக்கியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படத்தை வூன்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள வி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.
தனுஷ் கதை திரைக்கதை எழுதியுள்ள விஜபி 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலா பால், விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பாலிவூட் நட்சத்திரம் கஜோல் , தனுஷுக்கு சவால் விடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்து ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி தல அஜித்குமார் நடிப்பில் விவேகம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள வேளையில், தனுஷின் விஐபி 2 படத்தை வெளியிட வி கிரியேஷன்ஸ் மேலும் பின்னடைவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியாத பட்சத்தில், 25 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு விஜபி 2 திரையிடப்படலாம் என கணிக்கப்படுகிறது.
