அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மீண்டும் அர்ஜெண்டினா பயிற்றுனர் பொறுப்பை ஏற்க ஆசை – மரடோனா!
விளையாட்டு

மீண்டும் அர்ஜெண்டினா பயிற்றுனர் பொறுப்பை ஏற்க ஆசை – மரடோனா!

லண்டன், நவ.16 –

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்றுனராக மீண்டும் பொறுப்பேற்க தாம் ஆசைக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் கால்பந்து சகாப்தம் டியாகோ மரடோனா தெரிவித்துள்ளார். அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2 – 4 என்ற கோல்களில் நைஜீரியாவிடம் தோல்வி கண்டதை அடுத்து மரடோனா தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அர்ஜெண்டினாவின் மாண்பை நடப்பில் உள்ள பயிற்றுனர் கெடுத்து விட்டதாக மரடோனா குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய அரபு சிற்றரசில் தற்போது அல் புஜைரா கிளப்பின் நிர்வாகியாக இருக்கும் மரடோனா, 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினாவை வழி நடத்தினார்.

அர்ஜெண்டினா பயிற்றுனராக தாம் பொறுப்பு வகித்தப்போது அர்ஜெண்டினா அணியின் வெற்றி 75 விழுக்காடாக இருந்தது என அவர் சொன்னார். அர்ஜெண்டினாவின் முன்னாள் பயிற்றுனர்களைக் காட்டிலும் தாம் சிறந்த அடைவுநிலையாக கொண்டிருப்பதாக மரடோனா தெரிவித்துள்ளார்.

1978 ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா உலகக் கிண்ணத்தை வென்றபோது பயிற்றுனராக இருந்த செசார் லுவிஸ் மெனோட்டி, 1986 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்றபோது பயிற்றுனராக இருந்த கார்லோஸ் பிலார்டோவைக் காட்டிலும் மரடோனாவின் வெற்றி விழுக்காடு அதிகமாகவே உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன