Homeமலேசியாசெனட்டராக பதவியேற்றார் டத்தோ டி.மோகன்!

செனட்டராக பதவியேற்றார் டத்தோ டி.மோகன்!

கோலாலம்பூர், நவ.17 – 

ம.இ.காவின் தேசிய உதவி தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன்  இன்று  அதிகாரப்பூர்வமாக செனட்டர் பதவியை ஏற்றுக் கொண்டார் . காலை மணி 10.00-க்கு  மேலவைத் தலைவர்  டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்த பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில்  ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம், ம.இ.கா. துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி, ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர்களான டத்தோ எம்.சரவணன், டத்தோ பி.கமலநாதன்,  இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத் துறையின் சிறப்பு தூதரும், ம.இ.காவின் முன்னாள் தலைவரும் துன் எஸ். சாமிவேலு ஆகியோருடன் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்களும், இளைஞர் , மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.

ம.இ.காவின் சார்பில் காலியாக இருக்கும் நான்கு செனட்டர் பதவிகளில் கட்சியின் சிபாரிசின் பேரில் ஒரு பதவிக்கு டத்தோ டி. மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பூச்சோங் தொகுதியில் ம.இ.கா கேம் விலேஜ் கிளைத் தலைவர், மிஃபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத் தலைவர், மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத் தலைவர் பதவிகளை வகித்து வரும் இன்று முதல் செனட்டர் பொறுப்பை ஏற்கிறார்.

spot_img

latest articles

explore more