Homeமலேசியாசொத்து விபரங்களை அறிவிப்பதற்கு துன் மகாதீர் வேட்பாளராக வேண்டியதில்லை!

சொத்து விபரங்களை அறிவிப்பதற்கு துன் மகாதீர் வேட்பாளராக வேண்டியதில்லை!

கோலாலம்பூர், நவ.16
தனது சொத்து விபரங்களை அறிவிப்பதற்காக துன் டாக்டர் மகாதீர் வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் வேட்பாளராக நிற்க வேண்டியதில்லை என சுற்றுலாத்துறை அமைச்சரும் அம்னோவின் உச்சமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பொதுத்தேர்தலில் அவர் (துன்) போட்டியிட வேண்டியதில்லை. மாறாக, சொத்து விபரங்களை அறிவிக்கட்டும். அவர் மட்டுமல்ல. அவரது மகனின் சொத்து விபரங்களும் எங்களுக்கு தெரிய வேண்டுமென இன்று மைன்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 33ஆவது அனைத்துலக சீன வலை பந்து போட்டியை தொடக்கி வைத்த பிறகு அவர் கூறினார்.

எங்கிருந்து சொத்துகளுக்கான மூலதனம் வந்தது என்பதை அறிவியுங்கள். துன் மகாதீர் ஓய்வு பெற்றவுடன் அவரது மகன்கள் பணக்காரர்களாகியுள்ளனர். ஒவ்வொருவரும் குறைந்தது 10 கோடிக்கும் குறையாத சொத்துகளை கொண்டிருக்கின்றனர். அவரது மகன்கள் இது குறித்து விளக்க வேண்டும். நான் கேட்கிறேன் என நஸ்ரி சொன்னார்.

நேற்று துன் டாக்டர் மகாதீர் தனது சொத்து விபரங்களை அறிவிக்க தயாராக இருப்பதாகவும் ஆனால், 14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் மட்டுமே தாம் அவ்வாறு செய்வதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

spot_img

latest articles

explore more