பார்சிலோனா, நவ.18 –

லிவர்புல் கிளப்பின் மத்திய திடல் ஆட்டக்காரர் பிலிப்பே கோத்தின்ஹோவுக்குப் பதிலாக அர்செனல் ஆட்டக்காரர் மெசுட் ஓசிலை குறி வைக்கிறது பார்சிலோனா.

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியாக திகழ்ந்து வருவது பார்சிலோனா. இந்த அணியில் விளையாடிய பிரேசில் அணியின் நெய்மர் பிரான்ஸில் உள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாற்றாலகி சென்றார்.

நெய்மருக்குப் பதிலாக லிவர்புல் அணியில் விளையாடும் பிலிப்பே கோத்தின்ஹோவை வாங்க பார்சிலோனா விரும்பியது. ஆனால் லிவர்புல் அவரை விடுவிக்க மறுத்தது. இந்நிலையில் அர்செனல் அணியில் விளையாடும் மெசுட் ஓசிலை வாங்க பார்சிலோனா திட்டமிட்டுள்ளது. ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் ஆட்டக்காரர்கள் மாற்றும் சந்தையில் இதற்கான முயற்சியை பார்சிலோனா எடுக்க இருக்கிறது.

ஒசிலின் ஒப்பந்தம் இந்த பருவத்தோடு முடிவடைகிறது. இதனால் ஜனவரி மாதம் டிரான்ஸ்பருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அலெக்சிஸ் சான்செஸ் ஒப்பந்தமும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.