Homeவிளையாட்டுவட லண்டன் டார்பி ஆட்டத்தில் டோட்டேன்ஹம்மை வீழ்த்தியது அர்செனல்!

வட லண்டன் டார்பி ஆட்டத்தில் டோட்டேன்ஹம்மை வீழ்த்தியது அர்செனல்!

லண்டன், நவ.19 –

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்துப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற வட லண்டன் டார்பி ஆட்டத்தில் அர்செனல் 2 – 0 என்ற கோல்களில் தனது பரம வைரியான டோட்டேன்ஹாம் அணியை வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கியது முதலே அர்செனல் ஆட்டக்காரர்ள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 36 ஆவது நிமிடத்தில் மெசுட் ஒசில் இடது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து அடித்து பந்தை, முஸ்டாஃபி தலையால் முட்டி கோல் அடித்தார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அர்செனல் மேலும் ஒரு கோல் அடித்தது. அலெக்சான்ட்ரே லகாசெட்டே கொடுத்த பந்தை அலெக்சிஸ் சான்செஸ் கோலாக மாற்றினார்.

இதனால் முதல் பாதி நேரத்தில் அர்செனல் 2-0 என முன்னிலைப் பெற்றது. 2 ஆவது பாதி நேரத்தில் இரு அணி ஆட்டக்காரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்செனல் 2-0 என வெற்றி பெற்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்திற்குப் பிறகு அர்செனல் முதல் முறையாக டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருடனான புள்ளி வேறுபாட்டை அர்செனல் குறைத்துக் கொண்டுள்ளது.

spot_img

latest articles

explore more