Homeவிளையாட்டுஇங்கிலீஷ் பிரீமியர் லீக் - செல்சி, லிவர்புல் வெற்றி!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் – செல்சி, லிவர்புல் வெற்றி!

லண்டன், நவ.19 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான செல்சி, லீக் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செல்சி 4 – 0 என்ற கோல்களில் வெஸ்ட் புரோம்விச் அல்பியோன் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் செல்சி முதல் பாதியில் 3 கோல்களைப் போட்டு முன்னணி வகித்தது. 17 ஆவது நிமிடத்தில் செல்சியின் முதல் கோலை அல்வாரோ மொராத்தா போட்ட வேளையில் 23 ஆவது நிமிடத்தில் எடின் ஹசார்ட் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

38 ஆவது நிமிடத்தில் மார்கோஸ் அலோன்சோ போட்ட கோலின் மூலம் செல்சி தனது நிலையை மேலும் வலுவாக்கியது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் எடின் ஹசார்ட் மேலும் ஒரு கோலைப் போட்டு செல்சியின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தார்.

இதனிடையே அன்பீல்ட் அரங்கில் லிவர்புல் 3 – 0 என்ற கோல்களில் சவுத்ஹாம்ப்டன் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முஹமட் சாலா, லிவர்புல் அணிக்கு இரண்டு கோல்களைப் போட்டு அதிரடிப் படைத்துள்ளார். முதல் பாதி ஆட்டத்தின் 31 , 41 ஆவது நிமிடங்களில் சாலா அந்த இரண்டு கோல்களையும் போட்டார்.

இந்த இரண்டு கோல்களின் மூலம் சாலா, லிவர்புல் அணிக்கு 14 கோல்களைப் போட்டுள்ளார். பிரீமியர் லீக் போட்டியில் 12 ஆட்டங்களில் 9 கோல்களைப் போட்டிருக்கிறார். லிவர்புல் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் ரோபி வோவ்லர் 12 ஆட்டங்களில் எட்டு கோல்களை மட்டுமே போட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

சவுத்ஹாம்டன் அணிக்கு எதிராக லிவர்புல் அணியின் மூன்றாவது கோலை பிலிப்பே கோத்தின்ஹோ போட்டார். இந்த பருவத்தில் முதல் முறையாக லிவர்புல் தொடர்ச்சியாக மூன்று லீக் ஆட்டங்களில் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.

spot_img

latest articles

explore more