சுபாங் ஜெயா, நவ.19-
இப்பகுதியில் நன்கு அறிமுகமான யூ.எஸ்.ஜே. பிரதர்ஸ் ஏற்பாட்டில் இன்று ஆதரவற்றவர்கள், மாற்று திறனாளிகள் என சுமார் 43 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது. 13ஆவது ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி நேற்று சுபாங் பெர்டானா கோர்ட் 2, யூ.எஸ்.ஜே 6/1 என்ற குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.
யூ.எஸ்.ஜே. பிரதர்ஸை சேர்ந்த குமார், ரவி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புக்கிட் பெருந்தோங் உடல் ஊனமுற்றோர் அரவணைப்பு இல்லத்தை சேர்ந்தவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு பொருட்களுக்கும் அங்பாவ்களும் வழங்கப்பட்டன.
இது குறித்து குமார் மற்றும் ரவி கூறுகையில், ஆதரவற்றவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோர்களுக்கு இத்தகைய உதவிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும் இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினர்கள் ஆதரவளித்து வருவதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு பிரபல தொழிலதிபர்களான டத்தோஸ்ரீ ஜெயந்திரன், டத்தோ எஸ்.பாலன், டத்தோ விஜய் முத்தழகு முதலானோர் ஆதரவளித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர்கள் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு விருந்தோம்பலும் இசைநிகழ்ச்சியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.


