Homeமலேசியாகிள்ளானில் 3ஆவது பாலத்தை திறந்து வைத்தார் சிலாங்கூர் சுல்தான்!

கிள்ளானில் 3ஆவது பாலத்தை திறந்து வைத்தார் சிலாங்கூர் சுல்தான்!

கிள்ளான், நவ. 19-
19.9 கோடி வெள்ளி செலவில் கிள்ளானின் வட பகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட மூன்றாவது பாலத்தை சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா இன்று காலையில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இப்பாலத்திற்கு ராஜா மூடா நலாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜா மூடா நாலா என்பவர் சிலாங்கூரின் முதல் சுல்தானாக இருந்த சுல்தான் சாலேஹுடின் ஷாவின்( 1756 புதல்வர்களில் ஒருவராவார். இந்தப் பாலம், ஜாலான் சுங்கை பெர்தி, ஜாலான் தஞ்சோங் சவ்வால் மற்றும் ஜாலான் கோ ஹோக் குவாட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இரண்டரை கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். சுங்கை கிள்ளான் ஆற்றைக் கடக்கும் வகையில் 1.2 கிலோமீட்டர் மேம்பாலத்தை இது கொண்டிருக்கிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானம், மூன்றாண்டு காலத்திற்கு பின்னர் நிறைவு பெற்றதாக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். கிள்ளானில் நிலவும் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்த மூன்றாவது பாலம், இதர இரு பாலங்களில் நிலவும் சாலை நெரிசலில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு வரை குறைக்க உதவும் என்றும் அவர் சொன்னார்.

 

spot_img

latest articles

explore more