சுங்கைப்பட்டாணி, நவ. 21-
கெடா, சுங்கைப்பட்டாணியிலுள்ள பெர்டானா ஹெய்ட்ஸில் உள்ள ஒரு வீட்டில் தற்கொலை செய்துக்கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் பிரேதங்கள் இன்று 1.00 மணியளவில் சுங்கைப்பட்டாணியிலுள்ள இந்து சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிவராம் கிருஷ்ணன் (வயது 49) எனும் ஆடவர் தனது பிள்ளைகளான யமுனாஸ்ரீ (வயது 8), ரகுராம்ராவ் (வயது 6), சசின்ராவ் (வயது 5) ஆகியோருக்கு நேற்று விஷம் கொடுத்துவிட்டு மேல்மாடியிலுள்ள ஓர் அறையினுள் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
சிவராமின் மனைவி காமினி கடந்த நவம்பர் 1ஆம் தேதி கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார். அவர் இறந்து 21 நாள்கள் ஆகின்றது. வர்த்தகரான சிவராம் கடன் பிரச்னையாலும் மன உளைச்சலாளும் இருந்து வந்ததாக நம்பப்படுகின்றது. அவர் இறப்பதற்கு முன்பு அவரது வீடு லேலோங் எனப்படும் ஏல விற்பனைக்கு வந்ததாகவும் அவரது கார்களை வட்டிமுதலைகள் எடுத்துக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
காமினியின் இறப்பிற்கு பின்னர் அவரது தாயார் புனிதா அவர்களுடன் இருந்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி சிவராம் இரவு மணி 10.00 அளவில் தனது பிள்ளைகளுடன் மேல்மாடியிலுள்ள அறைக்கு உறங்ஜ சென்றுள்ளார். நேற்று அதிகாலை மணி 5.00 அளவில் தனது பேரப்பிள்ளை அலரும் சத்தத்தை புனிதா கேட்டுள்ளார். மாடியிலிருந்து இறங்கிய சிவராம் தனது மகள் தூக்கத்தில் உளறுவதாக கூறிவிட்டு மீண்டும் மேல்மாடிக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை மணி 8.00 அளவில் எழுந்த புனிதா வீட்டு வேலைகளை செய்துள்ளார். மணி 1.30 ஆகியும் அவர்கள் அனைவரும் கீழே இறங்காததால் மேல்மாடிக்கு சென்ற அவர், தனது மருமகன் சிவராம் தூக்கு போட்டிருப்பதை கண்டு தனது பேரப்பிள்ளை படிக்கும் பள்ளியின் ஆசிரியரை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் சோதணையை மேற்கொண்டதோடு நால்வரின் சடலங்களை பிரேத பரிசோதணைக்காக சுங்கைப்பட்டாணி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதை சுங்கைப்பட்டாணி மருத்துவமனையின் அதிகாரி டாக்டர் சித்தி நூர் ஆயு உறுதிப்படுத்தினார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தற்கொலை செய்துக்கொண்டது அவர்களது உறவினர்களை துயரக்கடலில் ஆழ்த்தியுள்ளது.






