முகப்பு > முதன்மைச் செய்திகள் > கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்!
முதன்மைச் செய்திகள்

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்!

கோலாலம்பூர், நவ.22 —

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜோகூர் , குளுவாங் நகரில் தாமான் பெர்சத்துவில்  உள்ள ஶ்ரீ வேல் முருகன் ஆலயத்துக்கு வருகைத் தந்தப்போது  அந்த ஆலயத்தின் சிற்ப வேலைப்பாடுகளில் கவரப்பட்ட மேலவைத் தலைவரும், ம.இ.கா உதவித் தலைவருமான டான் ஶ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் , ஆலய திருப்பணிக்கு 50 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்குவதாக அறிவித்திருந்தார்.

அதனை நிறைவேற்றும் வகையில் செவ்வாய்கிழமை ம.இ.கா தலைமையகத்தில் முதல் கட்டமாக 20 ஆயிரம், ரிங்கிட்டுக்கான காசோலையை விக்னேஸ்வரன் வழங்கினார். இந்த முதல் கட்ட உதவியின் வழி  தற்போது தொடங்கப்பட்டுள்ள ராஜகோபுர பணிகள் மிக துரிதமாக நடைபெறும் என ஆலய நிர்வாகத்தினர் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

இவ்வேளையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் கட்ட நிதியை வழங்கிய டான் ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு ம.இ.கா குளுவாங் தொகுதியும், ஶ்ரீ வேல் முருகன் ஆலய நிர்வாகமும் நன்றி தெரிவித்து கொண்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன