Homeமலேசியாநான் புத்ராஜெயாவில் போட்டியிடுவதாக கூறுவது அறிவுக்கு பொருந்தாதது! -ஷரிசாட் ஜாலில்

நான் புத்ராஜெயாவில் போட்டியிடுவதாக கூறுவது அறிவுக்கு பொருந்தாதது! -ஷரிசாட் ஜாலில்

கோலாலம்பூர், பிப்.11-
14ஆவது பொதுத்தேர்தலில் அம்னோவின் மகளிர் பிரிவு தலைவி டான்ஸ்ரீ ஷரிசாட் அப்துல் ஜாலில் புத்ராஜெயா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருப்பதாக கூறப்படும் சர்ச்சைக்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடப்பு புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அம்னோவின் தலைச்சிறந்த தலைவராக இருப்பதோடு கூட்டரசு பிரதேச மக்களின் விவகாரத்தில் மிகுந்த கவனத்தைச் செலுத்தி வருகிறார். அதனால், அவருக்கு பதிலாக தாம் அத்தொகுதியில் போட்டியிடவிருப்பதாக கூறப்படுவது அறிவுக்கு பொருந்தாத பேச்சு என அவர் தெரிவித்தார்.

யார் எங்கு வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்பது குறித்து ஆருடங்களைக் கூறுவதை நிறுத்திக்கொள்ளும்படி நான் கூறி விட்டேன். அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் மகளிர் பிரிவு தலைவி என்ற அடிப்படையில் எனது கடமை வலுவான மகளிர் எந்திரத்தை நிர்ணயிப்பதாகும். யார் எங்கு போட்டியிடுவார்கள் என்ற விவகாரத்தை தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் தாம் விட்டுவிடுவதாக இன்று கெப்போங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பிறகு ஷரிசாட் ஜாலில் கூறினார்.

என்னால் மகளிர் வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே பரிந்துரைக்க முடியும். மாறாக, அந்த வேட்பாளர்களுக்கான தொகுதிகளைப் பரிந்துரைக்க முடியாது. என அவர் சொன்னார்.

இதற்கு முன்பு, சுங்கை பெசார் அம்னோ தொகுதியின் தலைவரான டத்தோஸ்ரீ ஜமால் முஹம்மட் யூனோஸ், அந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்படி ஷரிசாட்டிற்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து, ஷரிசாட் அந்த தொகுதியில்தான் போட்டியிடுவார் என பரவலாக செய்திகள் வெளியாகின.

spot_img

latest articles

explore more