Homeமலேசியாஇப்போது பிரதமராவது எளிதல்ல -டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

இப்போது பிரதமராவது எளிதல்ல -டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

அலோர்ஸ்டார், செப்.3- 

இப்போது பிரதமராவது சுலபமான காரியமல்ல. தற்போது நாடு இருக்கக்கூடிய அதிகப்படியானக் கடன் சுமையின் கீழ் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டால் நாட்டை நிர்வகிப்பதில் தாம் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக் கொண்டுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. 1எம்டிபி ஊழல் சம்பவம் நாட்டின் நற்பெயருக்கு உலகளவில் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் பிரதமர் பொறுப்பை ஏற்பது அவ்வளவு சுலபமானதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அரசு தற்போது ஏராளமானச் சவால்களை எதிர்நோக்கி வருகிறது. அப்படி நானே பிரதமரானாலும் கூட  அது அவ்வளவு சுலபமானதாக இருக்காது என்று கெடா, பெர்லிஸ் பிகேஆர் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில் நாடு அம்னோவால் பாதிக்கப்பட்ட போதும் அதன் பெரும்பாலானத் தலைவர்கள் புதிய அரசு பற்றி கடுமையாக விமர்சிப்பது தமக்கு ஆச்சரியமாக இருக்கிறது என அவர் கூறினார்.

இதனிடையே, பிகேஆர் கட்சித் தேர்தலில் வழங்கப்படும் ஒவ்வொரு பதவியும் உருமாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் என்பதால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யாரும் தங்களின் பதவியை துஷ்பிரயோகப்படுத்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

இதில் பொதுத்தேர்தலில் தோல்வியுற்ற எந்த வேட்பாளரையும் பிகேஆர் ஒதுக்கி விடாது, மாறாக கட்சியை வரும் காலத்தில் வழிநடத்த அவர்களும் இணைத்துக் கொள்ளப்படுவர். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை யார் தங்களின் செல்வாக்கைக் காட்டாமல் பணிவாக, நேர்மையாக, உண்மையாக மற்றும் கட்சியைத் தற்காக்க உறுதியாக இருக்கிறார்களோ அவர்களைத் தேர்வுச் செய்யும்படி கட்சி உறுப்பினர்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அன்வார் மேலும் கூறினார்.

 

பிகேஆர் கட்சித் தேர்தல்கள் நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறும்.

spot_img

latest articles

explore more