Homeமலேசியாமோஜோ ப்ரோஜேக்ஸ்சின் மீண்டும் ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சி

மோஜோ ப்ரோஜேக்ஸ்சின் மீண்டும் ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சி

கோலாலம்பூர், செப் 6-

உலகளவில் சர்வதேச கலைஞர்களுடன் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வந்த  மோஜோ ப்ரோஜேக்ஸ் MILFF எனப்படும் மலேசிய சுயாதீன நேரலை இன்னிசை நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

இந்திய இசை சூழல் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. திரை இசைத் தவிர பல அசல் இசை உருவாகும் ஒரு மைய நடுவம். இந்த இரண்டு துருவங்களையும் ஒரே மேடையில் இணைக்க பெரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக மோஜோ ப்ரேஜேக்ஸ்சின் நிர்வாக இயக்குநர் ரத்னக்குமார் நடராஜன் தெரிவித்தார்.

மலேசிய இந்திய இசை ரசிகர்கள் தரமான இசைக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது தேவையை பூர்த்தி செய்வதற்கே மோஜோ ப்ரோஜேக்ஸ் தனித்தன்மை வாய்ந்த இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தயாரிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த இசை நிகழ்ச்சி மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளதால் 3ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. மக்களின் அமோக ஆதரவும் ஊக்குவிப்பும்தான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு காரணமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று அவர் சொன்னார்.

நேற்று தலைநகர் இஸ்தானா விடுதியில் இந்நிகழ்ச்சி தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 8ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 தொடங்கி இரவு 11.00 மணி வரை கோலாலம்பூர், KWC ஃபேஷன் பேரங்காடியில் விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில் பென்னி தயாள், ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் ஷோன் ரொல்டன், வீணை வித்துவான் ராஜேஸ் வைத்தியாவுடன் 50 இந்திய இசை கலைஞர்கள் பங்குப் பெறவுள்ளனர். அதே வேளையில், விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சத்யபிரகாஷ் மற்றும் பூஜா இம்முறை ராஜேஷ் வைத்தியா குழுவினருடன் புதிய கோணங்களில் பாடல்களை கொடுக்கவுள்ளனர். அவர்களுடன் மலேசிய கலைஞர்கள் சஷி தி டான், ரேமிட் மேக், ஆகியோர் தங்களது படைப்புகளை வழங்கவுள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சி குறித்து சத்யபிரகாஷ் கூறுகையில், இசை ஜாம்பவன்களான இளையராஜா, ஏர்.ரஹ்மான் தொடங்கி தற்போது இருக்கும் இசையமைப்பாளர்களின் இசையில் பாடிவிட்டேன். ஆனால், இந்த MILFF நிகழ்ச்சி எனக்கு புது அனுபவமாக உள்ளது. அதே வேளையில், மலேசிய மக்கள் என்னை வரவேற்கும் பன்பு மனநிறைவை தருகிறது என்று அவர் கூறினார்.

இதனிடையே, இது குறித்து பென்னி தயாள் கூறுகையில், மோஜோ ப்ரோஜேக்ஸ் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. இம்முறை ரசிகர்கள் பேரளவில் ரசிக்கக்கூடிய அளவிற்கு புதிய யுக்திகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறேன். இந்தியாவை காட்டிலும் மலேசிய ரசிகர்களின் வரவேற்பு என்னை வியக்க வைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை airasiaredtix.com/milff2018 இணையத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்நிகழ்ச்சி குறித்து மேல் விவரங்களைப் பெறுவதற்கு 0122000505 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more