Homeவிளையாட்டுமென்செஸ்டர் யுனைடெட் தொடர்பான கேள்விகளை முடக்கிய டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !

மென்செஸ்டர் யுனைடெட் தொடர்பான கேள்விகளை முடக்கிய டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !

லண்டன், டிச.21-

டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகி மவுரிசியோ பொச்சடினோவின் செய்தியாளர்கள் சந்திப்பில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பு தொடர்பில் அவரிடம் எழுப்பட்ட கேள்விகளை டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் ஊடக அதிகாரிகள் முடக்கினர். இரண்டு மூன்று முறை நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர்களின் ஒலி பெருக்கி அடைக்கப்பட்டதுடன் அது குறித்து பேச வேண்டாம் என்றும் நினைவுறுத்தப்பட்டனர்.

மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஜோசே மொரின்ஹோ நீக்கப்பட்டதை அடுத்து வரும் கோடைக் காலத்தில் மவுரிசியொ பொச்சடினோவை நிர்வாகியாக கொண்டு வர மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிரான்சின் சினிடின் சிடானைக் காட்டிலும் பொச்சடினோவைக் கொண்டு வருவதில் மென்செஸ்டர் யுனைடெட் தலைமை நிர்வாக அதிகாரி எட் வூட்வேர்ட் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பொச்சடினோ, தமது எதிர்காலம் குறித்து தற்போது எதனையும் கூற முடியாது என தெரிவித்தார். எனினும் 2023 ஆம் ஆண்டு வரை டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருடன் அவர் ஒப்பந்தம் கொண்டிருக்கிறார்.  கடந்த ஆகஸ்ட் மாதம் எந்த ஒரு புதிய ஆட்டக்காரரையும் அணியில் சேர்க்காத டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், ஜனவரி மாதமும் புதிய ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்யாது என கூறப்படுகிறது.

இதனால், புதிய சவாலைத் தேடி பொச்சடினோ, மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாக பொறுப்பேற்பார் என பிரிட்டன் ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இளம் ஆட்டக்காரர்களை மேம்படுத்துவதுடன், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை வலுவான ஓர் அணியாக உருவாக்கி இருக்கும் பொச்சடினோ, மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என அதன் முன்னாள் ஆட்டக்காரர் கேரி நெவில் தெரிவித்துள்ளார்.

spot_img

latest articles

explore more