கோலாலம்பூர், டிச. 21
சுபாங் ஜெயா, சீபில்ட் ஆலய கலவரத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இச்சம்பவம் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்ட நால்வரிடம் மீண்டும் விசாரணை நடத்தபடும் என பாலீஸ் துணைத் தலைவர் டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட 4 பேரும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவது உறுதியாவிட்டது. அச்சம்பவம் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் மேலும் துள்ளிதமாகன ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

போலீசார் 38 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் சாட்சிகள் அளிக்கக் கூடிய பலரை போலீஸ் அடையாளம் கண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.