Homeமலேசியாசூப்பர் லீக் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்று மிஃபா அணி சாதனை

சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்று மிஃபா அணி சாதனை

கோலாலம்பூர், டிச 29-
நமது இந்தியர் அணியான மிஃபா மலேசிய சூப்பர் லீக் கிண்ண போட்டிகளில் விளையாடும் தகுதியினை பெற்று சாதனை படைத்துள்ளது.

பிரிமியர் லீக்கில் பங்கெடுத்த முதல் இந்தியர் அணி என்ற பெருமையை தாண்டி சூப்பர் லீக்கிற்கும் தகுதி பெற்று சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த சரித்திர நிகழ்விற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக மிஃபாவின் செயலாளர் கே.வி.அன்பா தெரிவித்துள்ளார்.

பிரிமியர் லீக்கில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணி சூப்பர் லீக்கிற்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து பெல்க்ரா எப்.சி அணி சூப்பர் லீக்கில் விளையாடாத சூழலில், அடுத்த நிலையில் இருந்த நமது அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வேளையில் இந்த வாய்ப்பினை அளித்த மலேசிய கால்பந்து சங்கத்திற்கு மனமார்ந்த நன்றி என அவர் கூறினார்.

நமது அணி பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில் மிஃபாவின் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் அவர்களின் முயற்சியாலும் அவரின் ஊக்குவிப்பினாலும் மிஃபாவின் பயணம் தொடர்ந்தது. மிஃபாவின் வளர்ச்சிக்கு இவரின் பங்கு அளப்பறியது.

மேலும் அணியின் பயிற்றுநர் கே.தேவன்,மேலாளர் துவான் ஏ.எஸ்.பி.ராஜன், நன்கொடையாளர்கள், மிஃபாவின் செயற்குழு உறுப்பினர்கள், மிஃபா நிர்வாகத்தினர்கள், விளையாட்டாளர்கள், சமுதாய பெருமக்கள், என அனைவரின் கூட்டு முயற்சியாலும், ஒத்துழைப்போடும் நாம் இந்த இடத்தை எட்டியுள்ளோம் என்பதை நினைக்கையில் மிகவும் பெருமையாக உள்ளது என்றார் அவர்.

நமது பயணம் தொடரவும், மிஃபாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவும் அனைத்து விதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 2019 சூப்பர் லீக் போட்டிகளில் நமது அணி பெயர் மாற்றத்தோடு களம் கண்டு புத்துணர்ச்சியோடு பயணிக்கும். புத்தாண்டு பரிசாக மிஃபாவின் சாதனையை இந்திய சமுதாய மக்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக மிஃபாவின் செயலாளர் கே.வி.அன்பா தெரிவித்துள்ளார்.

spot_img

latest articles

explore more